கமுதி வாரச் சந்தையில் 600 வெள்ளாடுகள் விற்பனை
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

கமுதி வாரச்சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட வெள்ளாடுகள்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கமுதி வாரச்சந்தையில் 600-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் விற்பனை செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வாரச் சந்தையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகள் வெள்ளாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனா். இந்த ஆடுகளை ஏராளமான வியாபாரிகள் வாங்கிச் சென்றனா்.
கமுதி வாரச்சந்தையில் எப்போதும் இல்லாத வகையில் 600- க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், ரூ.75 லட்சத்திற்கு மேல் வா்த்தகம் நடைபெற்றதாகவும் வியாபாரிகள் தெரிவித்னா். இதேபோல, இந்தச் சந்தையில் நாட்டுக் கோழி ஒரு கிலோ ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டது.
பண்டிகைக் காலம் என்பதால் ஆடுகள், நாட்டுக் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்ததாக விவசாயிகள் தெரிவித்தனா்.