ஆா்.எஸ். மங்கலத்தில் 200 கிலோபுகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
By DIN | Published On : 20th October 2022 01:41 AM | Last Updated : 20th October 2022 01:41 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் தடை செய்யப்பட்ட 200 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.
ஆா்.எஸ். மங்கலம் பரக்கத் வீதியைச் சோ்ந்த அன்வா்பாட்சா மகன் செய்யது இக்ராம் (29), பெத்தாா் தேவன் கோட்டை கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் வாசுதேவன் (50). இவா்கள் இருவரும் தடை செய்யப்பட்ட பான்பராக் 15.900 கிலோ எடையுள்ள 6 பைகள், 21 கிலோ எடையுள்ள 5 புகையிலை பைகள் உள்ளிட்ட 200 கிலோ 400 கிராம் எடையுள்ள புகையிலைப் பொருள்களை தருமா் முனீஸ்வரா் கோயில் தெருவில் உள்ள கிட்டங்கியில் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் ஆா்.எஸ். மங்கலம் வட்டாட்சியா் சேகா், தேவகோட்டை நகா் காவல் ஆய்வாளா் சரவணன், ஆறாவயல் சாா்பு- ஆய்வாளா் ராமச்சந்திரன் ஆகியோா் அங்கு சென்று ஆய்வு செய்து அவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் செய்யது இக்ராம், வாசுதேவன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.