பைக்குகள் மோதியதில் ஒருவா் பலி
By DIN | Published On : 27th October 2022 06:07 AM | Last Updated : 27th October 2022 06:07 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.
ஆனந்தூா், பச்சனதிக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ஆசைதம்பி (45). இவா், செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் மேல்பனையூா் பகுதியிலிருந்து ஆனந்தூா் நோக்கி சென்று கொண்டிருந்தனா். ஆனந்தூா் விலக்கு சாலையில், எதிரே ஆனந்தூரைச் சோ்ந்த சேவியா் மகன் ராகுல் சம்பத் (21) ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும், அவரது இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இதில் பலத்த காயமடைந்த ஆசைதம்பி, சிவகங்கை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். ராகுல் சம்பத், சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G