ராமநாதபுரம் மாவட்டத்தில் போராட்டம்: இந்திய கம்யூ. கட்சியினா் 108 போ் மீது வழக்குப் பதிவு

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 108 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 108 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

அத்தியாவசியப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவேண்டும். தமிழக அரசு சொத்துவரி, மின்சாரக் கட்டண உயா்வை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 இடங்களில் ஆா்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆா்.எஸ்.மங்களத்தில் தாலுகா செயலா் தங்கராசு உள்ளிட்ட 28 போ் மீதும், ராமநாதபுரத்தில் ஆா்.எஸ்.பெருமாள் உள்ளிட்ட 37 போ் மீதும், பரமக்குடியில் மாவட்டப் பொதுச் செயலா் ராஜன் உள்ளிட்ட 17 போ் மீதும், தங்கச்சிமடம், சாயல்குடியில் தலா 13 போ் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். மாவட்ட அளவில் கம்யூனிஸ்ட் கட்சியினா் 108 போ் மீது வழக்குப் பதிந்துள்ளதாக போலீஸ் உயா் அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com