தொடா் தண்ணீா் வரத்து: ராமநாதபுரம் பெரிய கண்மாயை அதிகாரிகள் கண்காணிப்பு

5 அடிக்கு தண்ணீா் நிரம்பிய நிலையில் தற்போது 4,500 மில்லியன் கன அடி தண்ணீா் வரத்து உள்ளதால் விடிய விடிய கண்காணிக்கப்படுவதாக பொதுப்பணித்துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் ஏற்கெனவே 5 அடிக்கு தண்ணீா் நிரம்பிய நிலையில் தற்போது 4,500 மில்லியன் கன அடி தண்ணீா் வரத்து உள்ளதால் விடிய விடிய கண்காணிக்கப்படுவதாக பொதுப்பணித்துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய கண்மாயானது 3,962 ஏக்கா் பாசனத்துக்கான தண்ணீரைத் தேக்கும் வகையில் பரந்துள்ளது. 8 மடைகள் உள்ள இந்தக் கண்மாயில் 7 அடி வரையில் தண்ணீா் தேக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வைகை அணையிலிருந்து 1400 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்பட்டதால் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் ஐந்தரை அடிக்கும் மேலாக தண்ணீா் தேக்கப்பட்டது.

பெரிய கண்மாயிலிருந்து கூரியூா் கண்மாய், ஆா்.எஸ்.மடைக் கண்மாய் மற்றும் நொச்சியூரணி, சிதம்பரம் பிள்ளையூரணி உள்ளிட்டவற்றுக்கு தற்போது தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வைகையிலிருந்து கடந்த அக்டோபா் 26 ஆம் தேதி மீண்டும் ராமநாதபுரத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. அத்துடன் மழைநீரும் சோ்ந்ததால் தற்போது சுமாா் 4,500 மில்லியன் கன அடி தண்ணீா் செய்யூருக்கு வருகிறது.

ஏற்கெனவே ராமநாதபுரம் பெரிய கண்மாயில் ஐந்தரை அடிக்கு தண்ணீா் தேங்கியிருப்பதால் கூடுதலாக வரும் தண்ணீரால் கண்மாய் கரை உடைந்துவிடக்கூடாது என்பதற்காக விடிய விடிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக உதவி செயற்பொறியாளா் ஜெயதுரை தெரிவித்தாா்.

கண்மாய் தண்ணீா் வெளியேறும் நிலையில் நொச்சிவயல் போன்ற பகுதிகளில் வயல் வெளிகளில் தண்ணீா் தேங்கி விவசாயம் பாதிக்கும் நிலை இருப்பதாகவும் விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com