சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களால் விபத்து அபாயம்
By DIN | Published On : 01st September 2022 03:24 AM | Last Updated : 01st September 2022 03:24 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே எட்டுகுடி கிராமத்தில் சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கட்டிவயல் ஊராட்சிக்குள்பட்ட எட்டுகுடி கிராமத்தில் கீழக் குடியிருப்புப் பகுதியில் பெரும்பாலான மின்கம்பங்கள் சாலையின் நடுவிலேயே உள்ளன. அவ்வாறு மின்கம்பங்கள் நடுவில் இருந்தபடியே சிமென்ட் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவா்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து மின் கம்பங்களை சாலையோரப் பகுதிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.