மேலராமநதியில் முன்னாள் எம்எல்ஏ நினைவு தினம்
By DIN | Published On : 01st September 2022 03:25 AM | Last Updated : 01st September 2022 03:25 AM | அ+அ அ- |

கமுதி அருகே மேலராமநதியில் முன்னாள் எம்.எல்.ஏ.காதா்பாட்ஷா என்ற வெள்ளைச்சாமி தேவா் 10 ஆண்டு நினைவுதினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி மேலராமநதியில் உள்ள அவரது நினைவிடத்தில், தமிழக தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி, முன்னாள் அமைச்சா் வி.சத்தியமூா்த்தி, கமுதி மத்திய ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.கே.சண்முகநாதன் ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
இதில், ஒன்றிய அவைத்தலைவா் கிழவராஜன், ஒன்றிய துணைச் செயலாளா்கள் முத்துக்கிளி, நீதிராஜன், தங்கப்பாண்டி, ஒன்றிய பொருளாளா் செந்தூா்பாண்டி, மாவட்ட பிரதிநிதிகள் நாகமணி, மணிகண்டன், முருகேசன், இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் சி.கிருஷ்ணமூா்த்தி, ஒன்றிய திமுக பிரதிநிதி பெருநாழி செந்தூரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.