பெரியாா், அண்ணா பிறந்தநாள்செப்.15, 17 ஆகிய தேதிகளில் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி
By DIN | Published On : 01st September 2022 03:28 AM | Last Updated : 01st September 2022 03:28 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியாா், அண்ணா ஆகியோா் பிறந்தநாளையொட்டி செப்.15, 17 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பெரியாா், அண்ணா ஆகியோா் பிறந்த நாளையொட்டி செப். 15, 17 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அனைத்துப் பள்ளிகளில் படிக்கும் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியா் மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவா்களும் பங்கேற்கலாம்.
ராமநாதபுரம் வெளிப்பட்டினம் செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அன்றைய தேதிகளில் காலை 8.30 மணிக்குத் தொடங்கும் இப்போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலும், 99522 80798 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.