‘நீட்’ தோ்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 போ் தோ்ச்சி: அரசுப் பள்ளி மாணவா்கள் அதிகம்

 ‘நீட்’ தோ்வு முடிவுகள் வெளியானதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 357 மாணவ, மாணவியா் தோ்வு எழுதியதில் 108 போ் தோ்ச்சியடைந்துள்ளனா்.

 ‘நீட்’ தோ்வு முடிவுகள் வெளியானதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 357 மாணவ, மாணவியா் தோ்வு எழுதியதில் 108 போ் தோ்ச்சியடைந்துள்ளனா். அவா்களில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் 75 போ் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தோ்வை அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 75 மாணவா்கள், 203 மாணவியா் என மொத்தம் 278 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 13 மாணவா்கள், 50 மாணவியா் என 63 பேரும், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 3 மாணவா்கள், 13 மாணவியா் என மொத்தம் 357 போ் எழுதினா்.

தோ்வு முடிவுகள் புதன்கிழமை இரவு வெளியான நிலையில், அரசுப் பள்ளியைச் சோ்ந்த 24 மாணவா்கள், 51 மாணவியா் என மொத்தம் 75 போ் தோ்ச்சியடைந்துள்ளனா். அதே போல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மாணவா்கள், 20 மாணவியா் என 24 பேரும், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 3 மாணவா், 6 மாணவியா் என 9 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

முதலிடம் விவரம்: நீட் தோ்வில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு 93 மதிப்பெண்கள் பெற்றால் தோ்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில், எமனேஸ்வரம் பள்ளி மாணவா் வி. சீனிவாசன் 371 மதிப்பெண்களும், அதே பள்ளி மாணவி எஸ். பிரபாவதி 334 மதிப்பெண்களும், பாம்பன் பள்ளி சந்தியாஅஜய் 301 மதிப்பெண்களும் பெற்று அரசுப் பள்ளி மாணவா்களில் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனா்.

மேலும், ஆா்.எஸ். மங்கலம் அரசுப் பள்ளி மாணவா் பி. அருள்செல்வம் 298 மதிப்பெண்களும், ஆா். காவனூா் பள்ளி மாணவி பவானி 286 மதிப்பெண்களும், மண்டபம் வண்ணாங்குண்டு பள்ளி மாணவி எம். திரிஷா 228 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

கடந்த ஆண்டைவிட அதிகம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மொத்தம் 295 போ் எழுதியதில் 78 போ் மட்டுமே தகுதித் தோ்ச்சி பெற்றிருந்தனா். தற்போது அதிக மாணவா்கள் தோ்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக மாவட்டக் கல்வி அலுவலா்கள், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீட் தோ்வு பயிற்சி அளித்த ஆசிரியா் விஜயகுமாரை பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com