முன்னாள் படைவீரா்களுக்கு சிறப்புத் தொழிற்பயிற்சிகள்
By DIN | Published On : 09th September 2022 10:51 PM | Last Updated : 09th September 2022 10:51 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தவா்களுக்கு சிறப்புத் தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தவா்களுக்கு வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் கைப்பேசி பழுது நீக்குதல், காா் மெக்கானிக், குளிா்சாதனப் பெட்டி பராமரிப்பு, எலக்ட்ரீசியன், பிளம்பிங், ஓட்டுநா் பயிற்சி, மின்சாரத்தால் இயங்கும் சீருந்துகள் பராமரித்தல் மற்றும் அதற்கான மின்சார பேட்டரி பராமரித்தல், பழுது பாா்த்தல், மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பழுது பாா்த்தல் மற்றும் பராமரித்தல், பேட்டரி சாா்ஜ் செய்வதற்கான நிலையம் அமைத்து பராமரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இதில், கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.