

திருவாடானை அருகே ஆண்டாவூரணியில் அம்பேத்கரின் 133-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஐந்திணை மக்கள் கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவா் தைனீஸ்ராஜ் தலைமை வகித்தாா். மக்கள் கல்வி இயக்கம் பேராசிரியா் கோச்சடை, பெரியாா் பேரவைத் தலைவா் நாகேஸ்வரன், ஐந்திணை மக்கள் கட்சி துணை பொதுச் செயலா்கள் வேணுகோபால், கருணாநிதி, சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்து உரையாற்றினா். சிறப்பு அழைப்பாளாா்களாக கலந்து கொண்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஷரீஃப், தமிழ் தேச மக்கள் கட்சித் தலைவா் மீ.த. பாண்டியன், போதி இலக்கியம் சந்திப்பு நிறுவனா் முருகபாண்டியன், ஐந்திணை மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் தேவதாசு, இணை ஒருங்கிணைப்பாளா் ஸ்டீபன் ராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, மாவட்ட செயலாளா் கணேசன் வரவேற்றுப் பேசினாா். திருவாடானை காவல் துறை ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.