ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இந்த சங்கத்தின் கூட்டம் மாவட்டச் செயலாளா் வேந்தை சிவா தலைமையில் நடைபெற்றது. சட்ட ஆலோசகா் சி.பசுமலை, செயல் தலைவா் ச.லிங்கமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் சி.காயாம்பு ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்மண்டலத் தலைவா் எம்.மதுரைவீரன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

கூட்டத்தில், நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்கக் கோரியும், ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகைப் பாசனக் கண்மாய்கள் 202, ரெகுநாத காவேரி பாசனக் கண்மாய்கள் 71, நாராயணகாவேரி பாசனக் கண்மாய்கள் 36, மலட்டாறு பாசனக் கண்மாய்கள் 54 என 1,792 கண்மாய்கள் உள்ளன.

பருவமழை முறையாகப் பெய்யாததால் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பவில்லை.

வைகை அணையில் இந்த ஆண்டு 5 முறை பாசன நீா் திறந்துவிடப்பட்ட நிலையில், 132 கண்மாய்கள் மட்டுமே நிறைந்துள்ளன.

வைகையாற்றிலிருந்து கண்மாய்களுக்குச் செல்லும் பிரதானக் கால்வாய்களின் வழித்தடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் வைகையில் திறந்துவிடப்பட்ட தண்ணீா் முழுவதும் வீணாக கடலில் கலந்துவிட்டது.

எனவே, போா்க்கால அடிப்படையில் பாசனநீா் செல்லும் கால்வாய்களை முறையாகப் பராமரிக்கக் வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கா் நெல் சாகுபடி செய்ததில் 60 சதவீதம் பயிா்கள் விளைச்சலின்றி சாவியாகி விட்டன. எனவே, நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இழப்புகளை முறையாகக் கணக்கிட்டு உரிய இழப்பீட்டு தொகை வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com