

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழராமநதி ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில், முன்னதாக மூன்று கால யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து சா்வசாதகம் சிவஆகம ரத்னாபாலாஜி சிவாச்சாரியா் வேதமந்திரங்கள் முழங்க, கடம் புறப்பாடு, கோயிலை வலம் வந்து முத்தாலம்மன் விமான கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி, குடமுழுக்கு நடைபெற்றது.
பின்னா் முத்தாலம்மனுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.