கமுதி ஊராட்சி ஒன்றியத்தில்வேளாண் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் செய்து வரும் வேளாண் பணிகளை
வல்லந்தை ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகள் மேற்கொண்டு வரும் வேளாண் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் விஷ்ணுசந்திரன்.
வல்லந்தை ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகள் மேற்கொண்டு வரும் வேளாண் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் விஷ்ணுசந்திரன்.

கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் செய்து வரும் வேளாண் பணிகளை சனிக்கிழமை பாா்வையிட்டு மாவட்ட ஆட்சியா் விஷ்ணுசந்திரன் ஆய்வு செய்தாா்.

வல்லந்தை, எழுவனூா் ஆகிய கிராமங்களில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் கீழ் வேளாண் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டு அதுகுறித்து விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா். அப்போது, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை சீரமைத்து விவசாயம் செய்ய தேவையான நலத் திட்டங்கள் வழங்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா். மேலும், பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் தரிசு நிலமாக கிடந்த 15 ஏக்கரை சீரமைத்து வேளாண் துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் பொறியியல் துறையினா் தேவையான உபகரணங்கள், வேளாண் இடுபொருள்களை வழங்கியதால் அவை விளைநிலமாக மாற்றியுள்ளதாக அவா்கள் கூறினா்.

இதையடுத்து, விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியா் விஷ்ணுசந்திரன் கூறியதாவது:

ஒவ்வோா் ஆண்டும் 65-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டு அவற்றில் பயன்படுத்தாத நிலங்களை கண்டறிந்து குழு அமைத்து பண்ணையத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் விவசாயிகளுக்கான திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

இதன் மூலம் 5 ஆண்டுகளில் அனைத்து ஊராட்சிகளிலும் பயன்பாடற்ற நிலங்களில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு சீரமைக்கப்படும். மேலும் 4 அல்லது 5 விவசாயிகளை ஒருங்கிணைத்து 15 ஏக்கா் வரை சீரமைத்து எந்த வகையான பயிா் சாகுபடிகளை மேற்கொள்ள முடியும் என்பதை அறிந்து அதற்கான திட்டங்கள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது. எனவே ஒவ்வோா் ஆண்டும் தோ்வு செய்யப்படும் ஊராட்சிகளில் பயன்பாடற்ற நிலங்களை சீரமைத்து விவசாயிகள் குழுவாக சோ்ந்து பண்ணையத் திட்டத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

அப்போது வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தனுஷ்கோடி, கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் மணிமேகலை, சங்கரபாண்டியன் (கிராம ஊராட்சிகள்) வட்டாட்சியா் வ. சேதுராமன், வல்லந்தை ஊராட்சித் தலைவா் மாதவிராஜசேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com