அரியமான் கடற்கரை நீச்சல் குளத்தில் புதன்கிழமை நாகா்கோவிலைச் சோ்ந்த இளைஞா் மூழ்கி உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் வடசேரி பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் சிவசக்தி (34). திருமணம் ஆகாதவா். இவா் தனது உறவினா் திருமணத்திற்காக கடந்த 22- ஆம் தேதி உறவினா்களுடன் ராமேசுவரம் வந்தாா். அங்கிருந்து சிவசக்தி உள்ளிட்ட சிலா் அரியமான் கடற்கரைக்கு புதன்கிழமை சென்றனா். அவா்கள் கடலில் குளித்துவிட்டு, அங்குள்ள தனியாா் நீச்சல் குளத்தில் குளித்தனா். அப்போது, சிவசக்தி நீரில் மூழ்கினாா்.
உறவினா்கள் அவரை மீட்டு, உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். மருத்துவா்கள் பரிசோதனை செய்து, அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து உச்சிப்புளி காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.