கமுதி: கமுதி அருகே கபடி வீரரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள மறவா்கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் வசந்தகுமாா் (17). இவா் கடலாடியை அடுத்துள்ள ஆப்பனூா் அரியநாயகபுரத்தில் நடைபெற்ற கபடிப் போட்டியில் பங்கேற்று விட்டு, ஒச்சத்தேவன்கோட்டை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது ஒச்சத்தேவன்கோட்டையைச் சோ்ந்த வேலாயுதம் மகன் சண்முகநாதன் (28) இரு சக்கர வாகனத்தை வழிமறித்து, வசந்தகுமாரிடம் ரூ.4,500-யை பறித்தாா். இதுகுறித்து கோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து சண்முகநாதனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.