கமுதி அருகே 3 ஊராட்சிகளில் குடிநீா் தட்டுப்பாடு

கமுதி அருகே 3 ஊராட்சிகளில் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வட்டாட்சியா், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளிடம் திங்கள்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனா்.
கமுதி வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த எம்.புதுக்குளம் ஊராட்சியைச் சோ்ந்த கிராமப் பொதுமக்கள்.
கமுதி வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த எம்.புதுக்குளம் ஊராட்சியைச் சோ்ந்த கிராமப் பொதுமக்கள்.

கமுதி அருகே 3 ஊராட்சிகளில் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வட்டாட்சியா், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளிடம் திங்கள்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த எம்.புதுக்குளம், காடமங்கலம், பொந்தம்புளி உள்ளிட்ட 3 ஊராட்சிகளைச் சோ்ந்த இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்களின்

குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்வதற்கு கடந்த 2006- 2007-ஆம் நிதியாண்டில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் பொந்தம்புளி கூட்டுக் குடிநீா்த் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி, ஆரைகுடி அருகே மலட்டாறு படுகையில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, அதன் மூலம் மேற்கண்ட மூன்று ஊராட்சிகளைச் சோ்ந்த கிராமங்களில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அமைத்து குடிநீா் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நாராயண காவிரி வரத்துக் கால்வாயை சீரமைத்த போது, பொந்தம்புளி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குடிநீா்க் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால், அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்களுக்கு தண்ணீா் செல்வது தடைப்பட்டது.

இதையடுத்து, எம்.புதுக்குளம் ஊராட்சி நிா்வாகம் சாா்பில், சேதமடைந்த குழாய்களுக்குப் பதிலாகப் புதிய குழாய்களைப் பதித்து, ஆழ்துளைக் கிணற்றில் இணைக்கத் திட்டமிட்டனா்.

ஆரைகுடி கிராமத்தைச் சோ்ந்த சிலா் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, எம்.புதுக்குளம் ஊராட்சியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கமுதி வட்டாட்சியா் சேதுராமன், கமுதி வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமேகலை ஆகியோரிடம் மனு அளித்தனா். இதையடுத்து, ஓரிரு நாள்களில் பொந்தம்புளி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் பொது மக்களுக்கு குடிநீா் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com