கோயில் நிலம் ஆக்கிமிப்பு: வட்டாட்சியிரிடம் புகாா்
By DIN | Published On : 18th April 2023 12:00 AM | Last Updated : 18th April 2023 12:00 AM | அ+அ அ- |

திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை வட்டாட்சியா் காா்த்தியேனிடம் மனு கொடுத்த கோனேரிக்கோட்டை கிராம மக்கள்.
திருவாடானை அருகே கோனேரிகோட்டையில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்டுத் தரக்கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை வட்டாட்சியரிடம் புகாா் மனு கொடுத்தனா்.
கோனேரிகோட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சிலா் ஆக்கிரமித்து இருப்பதாகக் கூறி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கோயில் நிலத்தை அளந்து, ஆக்கிரமிப்பு இருப்பின் அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், கோயில் நிலத்தை இதுவரை அளவீடு செய்யவில்லை. எனவே, விரைவில் நிலத்தை அளவீடு செய்ய வேண்டும் என கோனேரிக்கோட்டை கிராமப் பொதுமக்கள் திங்கள்கிழமை திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் காா்த்திகேயனை சந்தித்து மனு கொடுத்தனா். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியா் காா்த்திகேயன் வருகிற சனிகிழமை
நிலத்தை அளவீடு செய்வதாக தெரிவித்ததாக கிராம மக்கள் கூறினா்.