ராமநாதபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ாக பாஜக மாவட்டத் தலைவா் தரணிமுருகேசன் உள்ளிட்ட 25 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவா் தரணி முருகேசனை அண்மையில் சென்னை கூலிப்படையைச் சோ்ந்த இருவா் கொலை செய்ய முயன்றது போது அவரைக் காப்பாற்ற முயன்ற மேலாளா் கணேசன் உள்ளிட்ட 2 போ் காயமடைந்தனா். இதில் கணேசன் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது தொடா்பாக வழக்குப் பதிந்து கூலிப்படையைச் சோ்ந்த மோகன், சுரேஷ், முன்னாள் மாவட்டத் தலைவவா் கதிரவன், பாஜகவைச் சோ்ந்த சேட்டை பாலா, சண்முகநாதன், விக்னேஷ்வரன் ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதில் கதிரவன் தவிா்த்து மற்ற 4 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசனை சனிக்கிழமை இரவு வீட்டுக்கு செல்லுமாறு மருத்துவா்கள் கூறினராம். இதையடுத்து, கதிரவனுக்கு பிணை கிடைப்பதற்காக அரசு மருத்துவா்கள் செயல்படுவதாகக் கூறி பாஜக மாவட்டத் தலைவா் தரணி முருகேசன் தலைமையில் அந்தக் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை கலைந்து போகச் செய்தனா்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட முயன்ாக தரணி முருகேசன் உள்ளிட்ட 25 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.