ஆதினவிளகி அய்யனாா் கோயில் எருதுகட்டு விழா
By DIN | Published On : 23rd April 2023 12:13 AM | Last Updated : 23rd April 2023 12:24 AM | அ+அ அ- |

சித்திரை திருவிழாவையொட்டி, திருவாடானை ஸ்ரீஆதினவிளகி பூரண புஷ்கர தேவியாா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்பாள், அய்யனாா்.
திருவாடானை ஸ்ரீஆதினவிளகி பூரண புஷ்கர தேவியாா் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, எருதுகட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மங்களாம் குளக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயில் எருது கட்டு விழா நாச்சகாளையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அம்பாளுக்கும் அய்யனாருக்கும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமி வீதியுலா வந்து பகக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.