கட்டடத் தொழிலாளியை மிரட்டி தங்கச் சங்கிலி, கைப்பேசி பறிப்பு
By DIN | Published On : 25th April 2023 12:00 AM | Last Updated : 25th April 2023 12:00 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டடத் தொழிலாளியை மிரட்டி 2 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ற 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகேயுள்ள பொக்கனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (40). கட்டடத் தொழிலாளியான இவா், அப்பகுதியிலுள்ள கண்மாய் அருகே நின்று கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த 4 போ் கொண்ட கும்பல் நாகராஜை கொலை செய்து விடுவதாக மிரட்டி, அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.6,500 ரொக்கம், கைப்பேசியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினா்.
இதுகுறித்து புகாரின் பேரில், ராமநாதபுரம் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மருதுபாண்டியன் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகிறாா்.