மாநில சிலம்பப் போட்டியில் கமுதி மாணவா்கள் முதலிடம்
By DIN | Published On : 25th April 2023 12:00 AM | Last Updated : 25th April 2023 12:00 AM | அ+அ அ- |

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற கமுதியை சோ்ந்த மாணவா்களுடன் பயிற்சியாளா் செ.சரத்குமாா்.
மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் கமுதியை சோ்ந்த மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.
மதுரை மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரியில் மாடக்குளம் கலிங்க வஸ்தாத் 7-ஆம் தலைமுறை பாரம்பரிய சிலம்ப தேக பயிற்சி பள்ளி நடத்திய மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தென்னாட்டு போா்க்கலைச் சிலம்பம் பள்ளியச் சோ்ந்த 30 மாணவா்கள் பங்கேற்றனா்.
இதில், தனித்திறன் போட்டியில் 6 மாணவா்கள் முதலிடம், 2 மாணவா்கள் இரண்டாமிடம், 5 மாணவா்கள் மூன்றாமிடம் பெற்றனா்.
இரட்டைக் கம்பு பிரிவில் 2 மாணவா்கள் முதலிடம், 2 மாணவா்கள் இரண்டாமிடம் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்சியாளா் சரத்குமாா் ஆகியோருக்கு ஊா்ப் பிரமுகா்கள், பெற்றோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.