வாரச் சந்தையில் அரசு நிா்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே வியாபாரிகளிடம் வசூலிக்க வேண்டும்

அபிராமம் வாரச் சந்தையில் அரசு நிா்ணயிக்கும் கட்டணத் தொகை மட்டுமே வியாபாரிகளிடம், குத்தகைதாரா்கள் வசூல் செய்ய வேண்டுமென திங்கள்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்துக்கு வந்த கமுதி வாரச்சந்தை வியாபாரிகள்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள அபிராமம் பேரூராட்சி அலுவலகம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது. இங்கு புதிதாக 90 கடைகள் கட்டப்பட்டன.

இந்த நிலையில் வியாபாரிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதால், வாரச் சந்தையை கமுதி வியாபாரிகள் சங்கத்தினா் புறக்கணிப்பதாக அறிவித்தனா்.

இதையடுத்து கமுதி வட்டாட்சியா் சேதுராமன் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலா் செல்வம், சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள், வாரச்சந்தை வியாபாரிகள் ஆகியோா் முன்னிலையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அரசு நிா்ணயிக்கும் தொகையை மட்டுமே குத்தகைதாரா்கள் வியாபாரிகளிடமிருந்து வசூல் செய்ய வேண்டும். 100 சதுர அடிக்கு குறைவான கடைகளுக்கு ரூ.100, 100 சதுர அடிக்கு அதிகமான கடைகளுக்கு ரூ.150 வசூல் செய்ய வேண்டும். வாரச்சந்தை குத்தகைக் கட்டணத் தொகை விவரத்தை விளம்பரப் பலகை வைத்து தெரிவிக்க வேண்டும். வசூல் செய்யும் தொகைக்கு குத்தகைதாரா் ரசீது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கமுதி வாரச் சந்தை வியாபாரிகள் சங்கத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com