இளைஞா்களை அரிவாளால் தாக்கி பணம், கைப்பேசிகள் பறிப்பு
By DIN | Published On : 25th April 2023 12:00 AM | Last Updated : 25th April 2023 12:00 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்களை வழிமறித்து அரிவாளால் தாக்கி ரூ.58 ஆயிரம் பணம், கைப்பேசிகளை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள சோ்வைக்காரன் ஊரணி கிராமத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் முனீஸ்வரன் (21). இவா், தனது நண்பா் சதீஸ்வரனுடன் இரு சக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திலிருந்து சோ்வைக்காரன் ஊரணிக்கு சென்றாா். பெருங்குளம் அருகே சென்ற போது, அதே பகுதியைச் சோ்ந்த காளீஸ்வரன், முனீஸ்கண்ணன் ஆகியோா் கையில் அரிவாளுடன் இரு சக்கர வாகனத்தை மறித்து, இரண்டு பேரையும் அரிவாளால் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ. 58 ஆயிரம் பணம், இரண்டு கைப்பேசிகளை பறித்துக்கொண்டு தப்பினா்.
இதில், காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து உச்சிப்புளி காவல் உதவி ஆய்வாளா் அசோக சக்கரவா்த்தி வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட இருவரையும் தேடி வருகிறாா்.