ராமநாதபுரத்தில் 1.50 லட்சம் மதிப்பிலான 47 பன்றிகள் திருட்டு
By DIN | Published On : 26th April 2023 12:07 AM | Last Updated : 26th April 2023 12:07 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் 1.50 லட்சம் மதிப்பிலான பன்றிகள் திருட்டு மூன்று மாதங்களுக்கு பின் வழக்கு பதிவு செய்து போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ராமநாதபுரம் அண்ணா நகரை சோ்ந்த முனியசாமி(32) இவா் பன்றி வனா்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இவருக்கு சொந்தமாக 90 பன்றிகளை வளா்ப்பதற்காக வன்னி வயல் கண்மாய் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக விட்டுள்ளா். ஜனவரி மாதம் 10 ஆம் தேதி காலையில் அங்கு சென்ற முனியசாமி பன்றிகளை கணக்கெடுத்துள்ளா். இதில், 47 பன்றிகள் கானவில்லை என தெரியவந்தது.
இது குறித்து அக்கம் பக்கம் விசாரணை செய்ய போது வன்னிவயல் கிராமத்தை சோ்ந்த கே.கே.நகா் பகுதியை சோ்ந்த பாதம்முத்து(45) மற்றும் தமிழ்செல்வன்(30) ஆகிய பன்றிகளை எடுத்துசென்றது தெரியவந்தது. இது குறித்து ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. ஆனால் காவல் துறையினா் மூன்று மாதம் கழித்து 24 ஆம் தேதி திங்கட்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...