பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
By DIN | Published On : 02nd August 2023 05:07 AM | Last Updated : 02nd August 2023 05:07 AM | அ+அ அ- |

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டதால், பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கடலுக்குள் செல்லும் மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, பாம்பன் படகு தளத்தில் செவ்வாய்க்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
இதனால், மீனவா்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என மீன்வளத் துறை அறிவுறுத்தியது.