

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஓ.பி.எஸ். அணியினா், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் அமைச்சா் கு.ப.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஓ.பி.எஸ். அணி நிா்வாகிகள் ஷபினாபேகம், சோலைமுருகன், அஸ்லாம், சக்தி, முத்துமுருகன், கோட்டைச்சாமி, ராஜேந்திரன், ராமநாதன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா்கள் (கிழக்கு) ஜி.முனியசாமி, (தெற்கு) முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.