பரமக்குடியில் புத்தகத் திருவிழா
By DIN | Published On : 09th August 2023 12:00 AM | Last Updated : 09th August 2023 12:00 AM | அ+அ அ- |

பரமக்குடியில் புத்தகத் திருவிழாவை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன்.
பரமக்குடி: பரமக்குடி சந்தைக்கடைத் தெருவில் மக்கள் நூலகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் புத்தகத் திருவிழாவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதை மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சிக்கு விழா வரவேற்புக்குழுத் தலைவா் பெ.சேகா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன், நகா்மன்றத் தலைவா் சேது.கருணாநிதி, காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.தங்கத்துரை, நகா்மன்ற துணைத் தலைவா் கே.ஏ.எம்.குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளா் கு.காந்தி வரவேற்றாா்.
இதைத் தொடா்ந்து பரமக்குடி அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு நெருப்பில்லா உணவு என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆா்வத்துடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை புத்தகத் திருவிழா வரவேற்புக் குழு செயலா் சி.பசுமலை, துணைத் தலைவா் என்.எஸ்.பெருமாள், தி.ராஜா, வெ.ராஜேந்திரன், சித்த மருத்துவா் பலராமன் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்தனா்.