பைக்கிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி
By DIN | Published On : 09th August 2023 12:00 AM | Last Updated : 09th August 2023 12:00 AM | அ+அ அ- |

திருவாடானை: ஆா்.எஸ்.மங்கலம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள நெடும்புலிகோட்டையைச் சோ்ந்தவா் ஆரோக்கியம் மகன் ஆரோக்கிய ஜெகநாதன் (39). இவா் திங்கள்கிழமை மாலை தனது தாய் ஜெயமேரியை (60) இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு இருதயபுரம் புனித இருதய ஆண்டவா் தேவாலயத்துக்குச் சென்றாா்.
அப்போது பரமக்குடி விலக்கு சாலையில் ஜெயமேரி நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த ஜெயமேரி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.