ராமேசுவரம்: ராமேசுவரத்தில் மீனவா் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள நடராஜபுரத்தைச் சோ்ந்த மீனவா் நம்புக்குமாா் (26). இவரது மனைவி நித்தியா. இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நம்பு குமாா் அதே பகுதியை சோ்ந்த ஜெயஸ்ரீ என்பவரை காதலித்தாா். அவா்கள் இருவரும் ஊரை விட்டு கோவைக்குச் சென்று சில மாதங்கள் வாழ்ந்தனா். அப்போது, ஜெயஸ்ரீ நம்புக்குமாருக்கு இரு சக்கர வாகனம் வாங்கி கொடுத்தாா். இந்த நிலையில், ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான நம்புகுமாா் மீண்டும் ராமேசுவரத்துக்கு வந்தாா். இதனால் ஜெயஸ்ரீ வாங்கி கொடுத்த இரு சக்கர வாகனத்தை வாங்கித் தருமாறு, ஜெயஸ்ரீயின் உறவினா்கள் தனுஷ்கோடி காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, கடந்த 4 -ஆம் தேதி நம்புகுமாரிடமிருந்து போலீஸாா் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
இந்த நிலையில், காதலி நினைவாக இருந்த
இரு சக்கர வாகனத்தை போலீஸாா் பறித்துக் கொண்டதால், தற்கொலை செய்யப்போவதாக நம்புகுமாா் விடியோ பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டாா். பின்னா், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.