

பஞ்சாப் மாநிலத்தில் சுதந்திர தின விழாப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ராணுவ வீரரின் உடல், அவரது சொந்த ஊரான கமுதி அருகேயுள்ள உச்சிநத்தத்தில் புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள உச்சிநத்தம் கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் முத்துராஜ் (25). இவா் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது, இவருக்காக ஒதுக்கப்பட்ட மின்சார இணைப்புப் பணிகளை செய்து கொண்டிருந்தாா்.
அப்போது மின்சாரம் பாய்ந்து முத்துராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊரான உச்சிநத்தம் கிராமத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, அவரது உடலுக்கு குடும்ப உறுப்பினா்கள், கிராமப் பொதுமக்கள், சேது சீமைப் பட்டாளம் ராணுவ வீரா்கள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.