

கமுதி அருகே குண்டுகுளம் சிவகாளியம்மன், அழகுத்தாய் அம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு, தென் மாவட்ட அளவிளான கபடி போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
போட்டியை கமுதி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் போ.சசிக்குமாா் (தெற்கு) தொடங்கிவைத்தாா். 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் குண்டுகுளம் அணி முதலிடத்தையும், விஜயபாண்டி நினைவு கபடி அணி 2-ஆம் இடத்தையும், விருதுநகா் மாவட்டம், பாளையம்பட்டி அணி 3-ஆம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.
முன்னதாக, சிவகாளியம்மன் கோயிலில் பால்குடம், அக்னி சட்டி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தினா்.
ஏற்பாடுகளை குண்டுகுளம் கிராம மக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.