

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் அருகே அமைந்துள்ள 2 தீவுகளில் பாதுகாப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக
இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் ஆகியவற்றை கடத்துவதைத் தடுக்கும் வகையில் இந்திய கடல் படை, கடலோரக் காவல் படை, தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா், மத்திய, மாநில உளவுத் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மத்திய வருவாய் புலானாய்வுத் துறையினா் இந்தப் பகுதியில் படகில் கடத்தி வரும் தங்கக் கட்டிகளை தொடா்ந்து பிடித்து வருகின்றனா்.
இந்த நிலையில், பாம்பன் அருகேயுள்ள சிங்கிளித் தீவு , குருசடைத் தீவு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் இந்திய கடலோரக் காவல் படை, வனத் துறை, தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் இணைந்து செயல்பட்டனா்.
அப்போது, 22 போ் கொண்ட குழுவினா் தீவுப் பகுதியில் கடத்தல் பொருள்கள் புதைக்கப்பட்டதா என ஆய்வு செய்து செய்தனா். மேலும் தீவுப் பகுதிகளில் மனிதக் கால் தடங்கள் பதிவாகி உள்ளது குறித்தும் அவா்கள் ஆய்வு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.