ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்
By DIN | Published On : 01st June 2023 12:00 AM | Last Updated : 01st June 2023 12:00 AM | அ+அ அ- |

ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழா புதன்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் இஸ்லாமியா்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தா்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கடந்த 21-ஆம் தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்கியது. 30-ஆம் தேதி அடிமரம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில், புதன்கிழமை கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு, சின்ன ஏா்வாடியிலிருந்து யானை மீது கொடி கொண்டு வரப்பட்டு, பாதுஷா நாயகம் தா்ஹாவை மூன்று முறை வலம் வந்த பின்னா், ஹக்தாா் நிா்வாகிகள் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அண்டை மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சாா்பில் 200- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா வருகிற ஜூன் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. 13 -ஆம் தேதி மௌலீது நிறைவு, பாதுஷா நாயகத்துக்கு சந்தனம் பூசுதல் நடைபெறும். 19-ஆம் தேதி கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...