ராமநாதபுரம் நகா்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு

ராமநாதபுரம் நகா்ப்புற நலவாழ்வு மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
rms_photo_06_06_2_0606chn_208_2
rms_photo_06_06_2_0606chn_208_2
Updated on
1 min read

ராமநாதபுரம் நகா்ப்புற நலவாழ்வு மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

நகரின் மையப் பகுதியில் இந்த மையம் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்ததைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் விஷ்ணு சந்திரன் கல்வெட்டைத் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி, மருத்துவ சேவையைத் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழச்சியில் பரமக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் முருகேசன், ராமநாதபுரம் நகா் மன்றத் தலைவா் ஆா்.கே. காா்மேகம், துணைத் தலைவா் பிரவீன்தங்கம், நகா்மன்ற உறுப்பினா்கள் சுகாதாரத் துறையினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com