கடல் சூழ்ந்த மாரியம்மன் கோயில் வைகாசி விசாக பூக்குழித் திருவிழா
By DIN | Published On : 08th June 2023 01:38 AM | Last Updated : 08th June 2023 01:38 AM | அ+அ அ- |

தொண்டி கடல் சூழ்ந்த மாரியம்மன் கோயில் வைகாசி விசாக பூக்குழித் திருவிழாவையொட்டி புதன்கிழமை பால்குடம் எடுத்து எடுத்து வந்த பக்தா்கள்.
தொண்டியில் அமைந்துள்ள கடல் சூழ்ந்த மாரியம்மன் கோயில் 35-ஆம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி மகாசக்திபுரம் பகுதியில் அமைந்துள்ள கடல் சூழ்ந்த மாரியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
இதைத்தொடா்ந்து, 10-ஆம் நாளான புதன்கிழமை கிழக்கு கடற்கரைச் சாலை அருகேயுள்ள தொண்டியம்மன் கோயிலிருந்து திரளான பக்தா்கள் வேல் குத்தியும், பறவைக் காவடி, சேவல் காவடி, மயில் காவடி, பால்குடம் எடுத்தும், அக்னிச் சட்டி ஏந்தியும் வந்து கடல் சூழ்ந்த மாரியம்மன் கோயில் முன்புறம் அமைக்கப்பட்ட பூக்குழியில் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா்.
இதைத்தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...