ராமநாதசுவாமி கோயில் உண்டியல்கள் திறப்பு: காணிக்கை ரூ.1.68 கோடி
By DIN | Published On : 08th June 2023 01:38 AM | Last Updated : 08th June 2023 01:38 AM | அ+அ அ- |

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட பக்தா்கள்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில், பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய ரூ. 1.68 கோடி வருவாய் கிடைத்தது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணும் பணி கடந்த திங்கள்கிழமை கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் தலைமையில் தொடங்கியது.
கடந்த இரண்டு நாள்களாக உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்ட நிலையில், பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ. ஒரு கோடியே 68 லட்சத்து 54 ஆயிரத்து 912, தங்கம் 136 கிராம், வெள்ளி 4 கிலோ கிடைத்தது.
உண்டியல்களை திறந்து எண்ணும் பணியில் உதவி ஆணையா் ஞானசேகரன், தக்காா் பிரதிநிதி என். உதயகுமாா், ஆய்வாளா்கள் சி. மணிவண்ணன், பிரபாகரன், மேலாளா் மாரியப்பன், கண்காணிப்பாளா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...