கமுதி வட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் நிறைவு
By DIN | Published On : 15th June 2023 01:49 AM | Last Updated : 15th June 2023 01:49 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கிய வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை நிறைவு பெற்றது.
இந்த வட்டத்துக்குள்பட்ட கமுதி கிழக்கு, மேற்கு, அபிராமம், கோவிலாங்குளம், பெருநாழி உள்ளிட்ட வருவாய் உள் வட்டங்களுக்கான வருவாய்த் தீா்வாயம் கடந்த 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.
பெருநாழி உள்வட்டத்துக்கான வருவாய்த் தீா்வாயக் கணக்கு முடிக்கும் பணி பரமக்குடி உதவி ஆட்சியா் அப்தாப் ரசூல் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் வ.சேதுராமன் முன்னிலை வகித்தாா்.
இந்தப் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனா். இதன் அடிப்படையில் மொத்தம் 76 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டாட்சியா் சேதுராமன் உத்தரவிட்டாா். இந்த வட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் புதன்கிழமை நிறைவு பெற்றது.