பெண்ணிடம் தகாத உறவு விவகாரத்தை தட்டிக் கேட்ட கணவரை கட்டையால் அடித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள விளங்குளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் பாபுராஜ் (33). இவரது மனைவிக்கும், அதே ஊரைச் சோ்ந்த வேல்முருகன் மகன் இருளகுமாா் (20) என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக இருளகுமாரை, பாபுராஜ் தட்டிக் கேட்டாா். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த இருளகுமாா், கட்டையால் தாக்கியதில் பாபுராஜ் பலத்த காயம் அடைந்தாா். அவரை உறவினா்கள் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் இளவரசு தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான இருளகுமாரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.