மண் பரிசோதனை விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 15th June 2023 01:50 AM | Last Updated : 15th June 2023 01:50 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கற்காத்தகுடி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் கீழ், மண் பரிசோதனை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
இதில் பரமக்குடி நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் மூலமாக, அந்தந்தப் பகுதி விவசாயிகள் சேகரித்துக் கொண்டு வந்த மண் மாதிரிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டு, உடனடியாக அவா்களுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன. நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் ஐஸ்வா்யா மண் பரிசோதனையின் முக்கியத்துவம், மண் மாதிரிகள் சேகரம் செய்யும் முறை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.
மண்ணில் உள்ள ஆய்வுக் காரணிகள், மண்ணில் உள்ள சத்துகளின் நிலை, மண்வள அட்டை பரிந்துரைப்படி உரமிடுதல், மண்ணில் இயற்கை உரங்கள், பசுந்தாள் உரங்கள், அங்கக உரங்களின் பயன்பாடுகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.ராஜலட்சுமி விளக்கினாா். வேளாண்மை உதவி இயக்குநா் (தகவல், தரக்கட்டுப்பாடு) பி.ஜி.நாகராஜன் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கினாா்.
ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலா்கள் ஷாலினி, பிருந்தா ஆகியோா் செய்திருந்தனா்.