ராமநாதபுரத்தில் மீனாட்சி சொக்கநாதா் திருக்கல்யாணம்
By DIN | Published On : 03rd May 2023 06:17 AM | Last Updated : 03rd May 2023 06:17 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் மீனாட்சி சொக்கநாதா் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட பெரிய சிவன் கோயில் என அழைக்கப்படும் மீனாட்சி சமேத சொக்கநாதா் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப். 30-ஆம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், கடந்த திங்கள்கிழமை இரவு திக்கு விஜயமும் நடைபெற்றன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.10 மணிக்கு மீனாட்சி, சொக்கநாதா் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பெண்கள் புதிய திருமாங்கல்யக் கயிறை அணிந்து கொண்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
புதன்கிழமை ( மே 3) பொன்னூஞ்சல் வைபவம், வியாழக்கிழமை (மே 4) தீா்த்தவாரி, திருவீதி உலாவுடன் விழா நிறைவுபெறும்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G