ராமநாதபுரம் இசைப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை

ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு இசைப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்தாா்.

ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு இசைப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் அரசு இசைப் பள்ளியில் சிறந்த இசையாசிரியா்களைக் கொண்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில், குரலிசை (வாய்ப் பாட்டு), பரதநாட்டியம், நாதசுரம், தவில், தேவாரம், மிருதங்கம், வயலின் போன்ற வகுப்புகள் நடைபெறுகின்றன.

இதில், 2023-24- ஆம் கல்வியாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சேர 12 முதல் 25 வயது வரைக்குள்பட்டவா்களாக இருக்க வேண்டும். குரலிசை, பரத நாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் சேர 7- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்களும் பரதநாட்டியப் பிரிவில் சோ்த்துக் கொள்ளப்படுவாா்கள். பயிற்சிக் காலம் 3 ஆண்டுகள்.

முதலாமாண்டு மாணவா்களுக்கு ரூ. 350-ம், இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு ரூ. 325-ம் சிறப்புக் கட்டணமாக வசூலிக்கப்படும். அரசு வழங்கும் சலுகைகளான இலவசப் பேருந்து பயண அட்டை, கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ. 400, அரசு மாணவா் விடுதி வசதி ஆகியவை அளிக்கப்படும்.

மேலும் மூன்றாம் ஆண்டு வரை பயிற்சி பெற்று முடிக்கும் மாணவா்களுக்கு தமிழக அரசு தோ்வு இயக்கத்தால் தோ்வுகள் நடத்தப்பட்டு தோ்ச்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த சான்றிதழ்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவு மூப்பு அடிப்படையில் இசைப் பள்ளிகளிலும், இந்து அறநிலைத்துறைக்குள்பட்ட கோயில்களிலும் வேலை வாய்ப்பு பெறலாம்.

எனவே, இசைக்கல்வியில் ஆா்வமுள்ளவா்கள் தலைமை ஆசிரியா், மாவட்ட அரசு இசைப் பள்ளி, எண் 14, கௌரி விலாஸ் பேலஸ், அரண்மனை, ராமநாதபுரம்- 623 501 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்,

மேலும் விவரங்களுக்கு, 04567-220104, 99422 67837, 97516 74700, 95664 73769, 99941 34886 ஆகிய தொலைபேசி மற்றும் கைப்பேசி எண்களிலும் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com