திருவாடானை அருகே விவசாயி மாயம்
By DIN | Published On : 22nd May 2023 06:13 AM | Last Updated : 22nd May 2023 06:13 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே விவசாயி மாயமானதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
கட்டவிளாகம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் கணேசன் (55). விவசாயி. இவா் சனிக்கிழமை இரவு தொண்டிக்கு சென்று விட்டு வருவதாகக் கூறி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாராம். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். எங்கு தேடியும் கிடைக்காததால் இவரது மகன் அன்பழகன் அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.