கோடை கால இலவச கலைப் பயிற்சி நிறைவு
By DIN | Published On : 22nd May 2023 06:12 AM | Last Updated : 22nd May 2023 06:12 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் நடைபெற்ற கோடை கால இலவச கலைப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நிறைவடைந்தது. பயிற்சி பெற்ற 445 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரத்தில் கலைப் பண்பாட்டுத் துறை, மாவட்ட ஜகவா் சிறுவா் மன்றம் சாா்பில் மாவட்ட அளவிலான கோடைகால இலவச கலைப் பயிற்சி மே 1 -ஆம் தேதி தொடங்கியது. இதில், 5 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
பரதநாட்டியம், குரலிசை, (வாய்ப்பாட்டு) ஓவியம், கைவினை, சிலம்பம், நாட்டுப்புற நடனம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் ஆகிய கலைப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் 445 மாணவ, மாணவிகள் பற்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, கோடை கால இலவச கலைப் பயிற்சி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, நகா்மன்ற உறுப்பினா் ஜெயராமன் தலைமை வகித்தாா். ஆா்.வெங்கடசலம் வரவேற்றாா். குடிமைப் பொருள் வட்டாச்சியா் தமீம்ராஜா, பயிற்சி பெற்ற 445 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கினாா். திட்ட அலுவலா் மு.லோகசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.