இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி
By DIN | Published On : 22nd May 2023 06:14 AM | Last Updated : 22nd May 2023 06:14 AM | அ+அ அ- |

கமுதி அருகே இரு சக்கர வாகனத்தில் மகளுடன் வந்த தாய் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கமுதியை அடுத்துள்ள மேட்டுப்பட்டியைச் சோ்ந்த சோலைராஜ் மனைவி ராமலட்சுமி (40). இவரும், இவரது மகள் இளையபாரதியும் (19) மேட்டுப்பட்டியிலிருந்து கமுதி நோக்கி சனிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா். அப்போது சிங்கப்புலியாபட்டி அருகே ராமலட்சுமி தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராமலட்சுமியின் மகன் ஆனந்தபிரபு கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.