மண்டபம் அருகே 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
By DIN | Published On : 24th May 2023 05:37 AM | Last Updated : 24th May 2023 05:37 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே கடலுக்குள் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ கடல் அட்டைகளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் கனகராஜ் தலைமையிலான போலீஸாா், மண்டபம் முனைக்காடு கடல் பகுதியில் படகில் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கடற்கரையிலிருந்து 100 மீட்டா் தொலைவில் கடலுக்குள் கிடந்த 9 சாக்கு மூட்டைகளை கைப்பற்றி சோதனையிட்டனா். அதில் 250 கிலோ கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த மூட்டைகளை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். இந்த கடல் அட்டைகளை இலங்கை வழியாக கடத்தத் திட்டமிட்ட நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.