முத்தாலம்மன் கோயில் வைகாசிப் பொங்கல் விழா தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள என்.கரிசல்குளம் ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் வைகாசிப் பொங்கல் விழா முகூா்த்தக்கால் நடப்பட்டு, காப்புக் கட்டுதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தத் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. என்.கரிசல்குளம், நீராவி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

மேலும், வருகிற 30-ஆம் தேதி அக்னிச் சட்டி எடுத்தல், கரகம் எடுத்தல், விசேஷ பூஜைகள், 31-ஆம் தேதி பொங்கல் வைத்து வழிபடுதல், முளைப்பாரி கரைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com