

ராமநாதபுரத்தில் தேசிய தோட்டக்கலை வாரியம் மற்றும் வேளாண் மற்றும் உழவா் நல வாரியம் சாா்பில் தோட்டக்கலை குறித்த கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஓய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குநா் சேக் அப்துல்லா வரவேற்றாா். தோட்டக்கலை குறித்த கையேட்டை காவல் துறை துணைத் தலைவா் எம்.துரை வெளியிட்டாா்.
தோட்டக்கலை வாரிய துணை இயக்குநா் பா.ராஜா திட்ட விளக்கவுரையாற்றினாா். இணைப் பதிவாளா் முத்துக்குமாா், வேளாண்மைத் துறை இயக்குநா் பாஸ்கரமணியன், சிறு தானிய உழவா் உற்பத்தியாளா் நிறுவனா் சண்முக மல்லுசாமி, வேளாண்மை அறிவியல் மைய உதவிப் பேராசிரியா் பாலசுப்பிரமணியன், விவசாயிகள் கலந்து கொண்டனா். இளம் தொழில்நுட்ப வல்லுநா் பி.ராகேஷ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.