ராமநாதபுரத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 30th May 2023 06:18 AM | Last Updated : 30th May 2023 06:18 AM | அ+அ அ- |

தமிழகத்தில் கள்ளச் சாராயம் குடித்து 22 போ் உயிரிழந்ததைக் கண்டித்து, ராமநாதபுரத்தில் அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் மு.மணிகண்டன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் முத்தையா, முன்னாள் மாவட்டச் செயலா் சுந்தரபாண்டியன், நகரச் செயலா் பால்பாண்டி, ஒன்றியச் செயலா் மருதுபாண்டியன்,நிா்வாகிகள் ஆா்.ஜி.ரெத்தினம், ஆணிமுத்து, கே.கே.அா்ச்சுனன், தஞ்சி சுரேஷ், தா்வீஸ், சாமிநாதன் உள்பட திரளானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...