ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்கப் பிரதிஷ்டை திருவிழா
By DIN | Published On : 31st May 2023 03:51 AM | Last Updated : 31st May 2023 03:51 AM | அ+அ அ- |

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்கப் பிரதிஷ்டை திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமாயண கால ஸ்தல வரலாறு எடுத்துக்காட்டு நிகழ்ச்சியாக ராமலிங்கப் பிரதிஷ்டை திருவிழா கடந்த 27- ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை ராவண சம்ஹாரமும், இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக இலங்கை மன்னராக விபீஷணா் பட்டாபிஷேகமும் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, ராமலிங்கப் பிரதிஷ்டை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ராமநாதசுவாமி கோயில் சுவாமி சந்நிதியில் அனுமன் லிங்கத்தை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...